
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தனி வார்டில் இன்று மதியம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
63 வயதான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், அவர் என்ன காரணத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. இன்று மதியம் 12 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.