இளையான்குடியில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

இளையான்குடியில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

இளையான்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கலிபா தெருவைச் சேர்ந்தவர் முகமது ரோஸ்லான். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் முக்கிய நிர்வாகியான இவரது வீட்டில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரி பிகாஸ் குமார் தலைமையில் இளையாங்குடி காவல்துறையினர் சோதனைக்காக வந்திருந்தனர். அங்கு வீட்டில் இருந்த அவரது உறவினர்களிடம் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை செய்தனர்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோஷம் எழுப்பினார். தேசிய புலனாய்வு முகமையே வெளியேறு என்று தோஷங்களை எழுப்பினர். இதனால் இளையான்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in