பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை: கோவை, திருச்சியில் பரபரப்பு

பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை: கோவை, திருச்சியில் பரபரப்பு
பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை: கோவை, திருச்சியில் பரபரப்பு

பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகி மற்றும் முன்னாள் நிர்வாகி உட்பட பலரது இல்லங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கோவை, திருச்சி, நெல்லை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

கும்பகோணம், திருபுவனம் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019 ம் ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை தட்டி கேட்டதால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. மதமாற்றம் தொடர்பான வழக்கு என்பதால் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், ராமலிங்கம் கொலை தொடர்பாக தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ போன்ற அமைப்புக்களின் நிர்வாகிகளின் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹெச்எம்பிஆர் வீதியில் பிஎப்ஐ அமைப்பின் முன்னாள் நிர்வாகி அப்பாஸ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பான இரண்டு சாட்சிகளுடன் தேசிய புலனாய்வு முகமை ஆய்வாளர் ரஞ்சித் சிங் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினர், திருச்சி பீமநகர் பண்டரினாதபுரம் ஹாஜிமுகமது உசேன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் அப்சல் கான் என்பவரிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அமைப்பை சேர்ந்தவர் அப்சல் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வழக்கு தொடர்பாக திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in