அதிகாலையில் நுழைந்த என்.ஐ.ஏ: எஸ்டிபிஐ நிர்வாகி வீட்டிலும் அதிரடி சோதனை!

அதிகாலையில் நுழைந்த என்.ஐ.ஏ: எஸ்டிபிஐ நிர்வாகி வீட்டிலும் அதிரடி சோதனை!

ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில் எஸ்டிபிஐ நிர்வாகி பராக்கத்துல்லா வீட்டில் தேசிய புலனாய்வு முகமையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, கடலூர், கோவை, ராமநாதபுரம், திண்டுக்கல், தென்காசி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் எஸ்டிபிஐ நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்த்தல், பயிற்சி நடத்துதல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் பராகாக்துல்லா வீட்டில் இன்று அதிகாலை 2.30 மணியிலிருந்து என்ஐஏ அமைப்பினர் சோதனை நடத்திவருகின்றனர். எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையில் ஆவணங்கள் சிக்கியுள்ளதால், அவர் கைது செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in