பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மாநில செயலாளரைக் கைது செய்தது என்ஐஏ!

ரவுப்
ரவுப்

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் கேரள மாநிலச் செயலாளர் ரவுப்பை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் முக்கிய நிர்வாகிகளின் இல்லங்களில் என்.ஐ.ஏ அமைப்பினர் சோதனை மேற்கொண்டிருந்தனர். இதனைக் கண்டித்து கேரளத்தில் பந்த் நடத்தப்பட்டது. இதில் பொதுச்சொத்துகள் பலவும் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்கள் பலரையும், அந்த இயக்கம் தடை செய்யப்பட்ட கையோடு கைது செய்தனர். கேரளத்தில் பாப்புலர்ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த ரவுப் மட்டும் அதில் தலைமறைவானார்.

ரவுப்பை என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர்ந்து தேடிவந்தனர். இந்நிலையில், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி கரும்புள்ளி பகுதியில் உள்ள தன் இல்லத்திற்கு ரவுப் வந்திருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ரவுப் வீட்டிற்குள் நேற்று நள்ளிரவு நுழைந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரைச் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்கள் பலரையும் கேரளத்தில் பந்தின் பெயரில் கலவரத்தைத் தூண்டியது, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் தலைமறைவானதற்கு காரணமாக இருந்தது உள்ளிட்ட முக்கியக் குற்றச்சாட்டுகள் ரவுப் மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in