பேருந்து எங்கே வருகிறது என பயணிகள் காத்திருக்க வேண்டாம்?- இனி ஸ்பீக்கரில் அறிவிப்பு வெளியாகும்!

பேருந்து எங்கே வருகிறது என பயணிகள் காத்திருக்க வேண்டாம்?- இனி ஸ்பீக்கரில் அறிவிப்பு வெளியாகும்!

சென்னை மாநகரப் பேருந்துகளில் அடுத்த பேருந்து நிறுத்தம் என்ன என்பது குறித்து அறிவிக்கும் வசதி விரைவில் அறிமுகமாகவிருக்கிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் சுமார் 6,000 பேருந்துகள் ஜியோ-கோடிங் செய்து, பேருந்து நிறுத்தங்களைக் கண்டறியும் வசதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறைவு பெற்றுவிட்டது. தற்போது 500 பேருந்துகளில் அந்த அமைப்புகளை நிறுவும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக ஒவ்வொரு பேருந்துகளிலும் ஆறு ஸ்பீக்கர்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஆயிரம் பேருந்துகளில் பேருந்து நிறுத்தங்களை அறிவிப்பதற்கான அமைப்புகளை நிறுவும் பணி நடைபெற உள்ளது. பிறகு படிப்படியாக அனைத்துப் பேருந்துகளுக்கும் இந்த பணிகள் விரிவுபடுத்தப்படும்.

முதல் கட்டமாக அடுத்த பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்புகள் தமிழில் மட்டுமே அறிவிக்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு, பிறகு மேம்படுத்தப்படும் போது ஆங்கிலத்திலும் அறிவிக்கும் வகையில் மாற்றப்படும். இந்த அறிவிப்பானது பேருந்து நிறுத்தம் வருவதற்கு 200 முதல் 250 மீட்டர் தொலைவு இருக்கும் போது பேருந்தில் அறிவிக்கப்படும். இந்த வசதி விரைவில் அனைத்து விதமான பேருந்துகளிலும் ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in