அடுத்த அமெரிக்க வங்கியும் வீழ்ந்தது: உலகளவில் வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பதற்றம்!

ஏடிஎம் வாயிலில் கவலையுடன் காத்திருக்கும் அமெரிக்கர்கள்
ஏடிஎம் வாயிலில் கவலையுடன் காத்திருக்கும் அமெரிக்கர்கள்

அமெரிக்காவின் சிலிக்கன் வேலி வங்கியைத் தொடர்ந்து சிக்னேச்சர் வங்கியும் வீழ்ந்ததில், உலகளவில் வங்கிகள் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றம் எழுந்துள்ளது.

அமெரிக்க மிகப்பெரும் வங்கிகளின் வரிசையில் 16வது இடத்தில் இருந்தது சிலிக்கன் வேலி வங்கி. கடந்த வார இறுதியில் இந்த வங்கியின் செயல்பாடு நிலைகுலைந்தது. சிலிக்கன் வேலி வங்கி சரிந்ததன் அதிர்வுகள், அதனையொத்த பிற வங்கிகளையும் பாதித்தன. அந்த வகையில் அடுத்த சில தினங்களில் சிக்னேச்சர் வங்கியின் வீழ்ச்சி உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவின் 2 வங்கிகள் அடுத்தடுத்து வீழ்ந்ததில், அமெரிக்காவின் மிகப்பெரும் ஒரு சில வங்கிகளைத் தவிரத்து இதர வங்கிகளை, வாடிக்கையாளர்கள் நெருக்கி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையை தக்கவைக்க இந்த வங்கிகள் போராடி வருகின்றன.

டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட மோசமான முடிவுகள், ஜோ பைடன் காலத்தில் தொடங்கிய சீர்திருத்த நடவடிக்கைகள், உக்ரைன் போரை முன்னிட்டு உலகளவில் எழுந்த பணவீக்கத்தை சமாளிக்க அமெரிக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்தது.. உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், இந்த வங்கிகளின் வீழ்ச்சிக்கு காரணமாக சொல்லப்படுகின்றன.

விழுந்த வங்கிகள்
விழுந்த வங்கிகள்

சிலிக்கன் வேலி வங்கியைப் பொறுத்தவரை, வெளிச்சந்தையில் அதிகரித்த வட்டி விகிதத்தில் முதலீடு செய்ய விரும்பிய வாடிக்கையாளர்கள், தங்களது வங்கி பத்திரங்களை அதிகளவில் விற்க முனைந்தனர். அனைவருக்கும் ஒரே நேரத்தில் பெருந்தொகை அளிப்பதில், வங்கி தடுமாறுவது தெரிந்ததும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது சேமிப்பு மற்றும் முதலீடுகளை வழித்தெடுக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக சிலிக்கன் வங்கி வீழ்ந்தது.

சிக்னேச்சர் வங்கியைப் பொறுத்தவரை அது ஏற்கனவே தடுமாறி வந்தது. கிரிப்டோகரன்சி வர்த்தகர்களில் பெரும்பாலானோர் அதில் முதலீடு செய்திருந்தனர். கிரிப்டோ சந்தை தொடர் சரிவுக்கு ஆளானதில், சிக்னேச்சர் பெரும் வங்கி ஆட்டம் கண்டது. சிலிக்கன் வேலி வங்கியின் அதிர்வு தாக்கியதில், அதற்கென காத்திருந்தது போல சிக்னேச்சர் வீழ்ந்திருக்கிறது.

இந்த 2 வங்கிகளின் வீழ்ச்சி அதனையொட்டிய இதர வங்கிகளிடம் எதிரொலித்ததில், பல வங்கிகளின் நிலைமை ஊசலாடி வருகிறது. வங்கிகளின் தடுமாற்றம் அமெரிக்க பங்குச்சந்தையில் எதிரொலித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் சந்தைகள் சரிவு கண்டுள்ளன. இதர வங்கிகள் மற்றும் அதன் வாடிக்கையாளர்களையும் பதற்றம் தொற்றியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in