வரும் 25 ஆண்டுகள் மிக முக்கிய காலம்; நாம் 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

வரும் 25 ஆண்டுகள் மிக முக்கிய காலம்; நாம் 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்தியாவின் 76வது சுதந்திர தினமான இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, 9வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த பின்னர் நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது, “நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளை நினைவில் கொண்டு அவர்களின் கனவை நனவாக்க வேண்டும். இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிக முக்கியமான காலகட்டம். அதற்காக இந்தியர்கள் 5 உறுதிமொழிகளை ஏற்கவேண்டும்.

1)நாம் பெரிய இலக்குகளுடன் முன்னேறி செல்லவேண்டும், அந்த இலக்கு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும்.

2)எல்லாவகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும்.

3)நமது பாரம்பரியத்தை நினைத்து பெருமிதம் கொள்ள வேண்டும்.

4)ஒற்றுமையின் பலத்தின் மீது உறுதியான பற்று கொள்ளவேண்டும்.

5)மக்கள் தங்கள் கடமைகளை தவறாது நிறைவேற்ற வேண்டும்

மேலும் அனைத்து மாநிலங்களும் அரசியல் வேறுபாடுகளை தாண்டி ஒருங்கிணைந்து இந்தியாவின் 140 கோடி மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in