திருமணமான மூன்றே நாளில் கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை

திருமணமான மூன்றே நாளில் கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை

திருமணமான மூன்றேநாளில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் அருகில் உள்ளது காக்கனபாளையம். இங்கு கட்டுமானத் தொழிலாளியாக இருப்பவர் துருவன்(27) இவர் கட்டிட வேலையில் கையாளாக இருந்த திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்த பானுப்பிரியா(25) என்பவரைக் கடந்த மூன்றுநாள்களுக்கு முன்பு திருமணம் செய்தார். இதனிடையில் தம்பதிக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

இதனால் காக்கனபாளையம் பகுதியில் உள்ள காளி என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து இன்று பானுப்பிரியா தற்கொலை செய்துகொண்டார். அப்பகுதியில் சென்றவர்கள் இதைப் பார்த்துவிட்டுத் துருவனுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீஸார் பானுப்பிரியா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

திருமணமாகி மூன்றே நாள்களில் மணப்பெண் இறந்ததால் இதுகுறித்து கோட்டாச்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in