திருமணமான 2-வது நாளில் பறிபோன இளம்பெண்ணின் உயிர்: கோயிலுக்கு கணவருடன் சென்றபோது நடந்த துயரம்

திருமணமான 2-வது நாளில் பறிபோன இளம்பெண்ணின் உயிர்: கோயிலுக்கு கணவருடன் சென்றபோது நடந்த துயரம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே நடந்த விபத்தில் புதுமணப் பெண் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த சுரேஷ்(35) மற்றும் சுப்பிரமணி(50) ஆகிய இருவரும் வேலூரிலிருந்து திருச்செங்கோடு நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். அதேபோல திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனன்(29) என்பவர் தனது மனைவி ஜீவிதா(21) உடன் திருச்செங்கோட்டிலிருந்து வேலூர் நோக்கி காரில் பயணம் செய்துள்ளார். அப்போது பைக்கும், காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சுரேஷ், சுப்பிரமணி ஆகிய இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் வந்த புதுமணப் பெண்ணான ஜீவிதா என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். இருவருக்கும் கடந்த திங்கள் கிழமைதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இருவரும் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்த போது நடந்த விபத்தில் கணவன் கண் எதிரிலேயே மனைவி ஜீவிதா பரிதாபமாக உயிரிழந்தார். மூவரின் உடல்களும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்செங்கோடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in