காதல் தோல்வியால் கலங்கி நிற்கும் இளைஞர்கள்: ‘ப்ரேக் அப்’பிலிருந்து மீட்க நியூசிலாந்து அரசு புதிய திட்டம்!

ப்ரேக் அப்
ப்ரேக் அப்காதல் தோல்வியால் கலங்கி நிற்கும் இளைஞர்கள்: ‘ப்ரேக் அப்’பிலிருந்து மீட்க நியூசிலாந்து அரசு புதிய திட்டம்!

ப்ரேக் அப் எனப்படும் காதல் தோல்வியால் நியூசிலாந்தில் எண்ணற்ற இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த சிக்கலிலிருந்து இளைஞர்களை மீட்க ‘லவ் பெட்டர்’ எனும் புதிய பிரச்சாரத்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

ப்ரேக் அப் என்பது இளைஞர்களுக்கு மிகவும் வேதனையான அனுபவமாகும், இதன் காரணமாக பலரும் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். பெரிய அளவிலான உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கும் ப்ரேக் அப்கள், ஒரு நபரின் மன ஆரோக்கியத்தை தீவிரமாக பாதிக்கின்றன. எனவே காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவ நியூசிலாந்து அரசு ஒரு தனித்துவமான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது

"லவ் பெட்டர்" என அழைக்கப்படும் இந்த பிரச்சாரம், காதல் தோல்வியடையும் போது என்ன செய்வது என்பது பற்றிய ஆலோசனைகளை இளைஞர்களுக்கு வழங்குகிறது. ஏற்கெனவே ப்ரேக் அப்பிலிருந்து வெற்றிகரமாக மீண்டவர்கள், தங்கள் அனுபவங்களை மற்றவர்களுக்கு இதன் மூலமாக பகிர்ந்து கொள்கிறார்கள்.

இப்பிரச்சாரத்தில் பேசிய ஒரு இளைஞர், "பிரேக்-அப்கள் மோசமானவை. ஆனால் நீங்கள் அதை நல்லதாக மாற்றலாம். உங்களை நீங்களே உணருங்கள். நாம் அதை நேர்மையாகச் செய்ய வேண்டும். இது அபத்தமானது, இது மிகவும் கைமீறிப் போகிறது, இரவில் தூங்க வேண்டும். அவளைக் கடக்க வேண்டும், அந்த நினைவுகளை நீக்க வேண்டும்" என்று கூறினார்.

இன்று ‘லவ் பெட்டர்’ பிரச்சார அறிவிப்பை வெளியிட்ட சமூக மேம்பாட்டிற்கான இணை அமைச்சர் பிரியங்கா ராதாகிருஷ்ணன், காயங்களைச் சமாளிக்க இளைஞர்களுக்கு அரசாங்கம் ஆதரவளிக்க விரும்புவதாகவும், தனக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்காமல் ஒரு வழி இருப்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

நியூசிலாந்தில் 16-24 வயதுடைய பத்து பேரில் ஆறு பேர் ப்ரேக் அப்பை சந்தித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களை அனுபவித்திருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, வளர்ந்த நாடுகளில் அதிக இளைஞர் தற்கொலைகள் நடக்கும் நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in