சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: காவல் ஆணையர் கடும் கட்டுப்பாடு

சங்கர் ஜிவால்
சங்கர் ஜிவால்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், டிச.31-ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீஸார், 1500 ஊர் காவல் படையினர் ஈடுபடுவார்கள். மெரினா கடற்கரையில் கூடுதலாக தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணிக்குள் நட்சத்திர விடுதிகள் முடித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் நட்சத்திர விடுதிகளின் கொண்டாட்ட பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், நட்சத்திர விடுதிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாது. மதுபோதையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுமட்டுமல்லாமல், சென்னை மெரினா காமராஜர் சாலையில் டிசம்பர் 31-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதியில்லை. இரவு நேரத்தில் தெளிவாக படம்பிடிக்கக் கூடிய ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிக்கப்படும்.

சோதனைச்சாவடிகள் மட்டுமின்றி ரோந்து வாகனம் மூலமாக பைக் ரேஸ் தடுக்கப்படும். மேலும், அதிகளவில் மது போதையில் உள்ள நபர்களை விடுதிக்குள் அனுமதிக்கக் கூடாது. ஓட்டல்களில் விதிகளை மீறி நிகழ்ச்சிகள் நடத்தினால் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும். மது விருந்து நடைபெறும் இடத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in