
தொலைந்த செல்போன்களை கண்டுபிடிக்க மத்திய அரசு புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைந்து போகும் அல்லது திருட்டு போகும் செல்போன்களை கண்டு பிடிக்க இதுவரை அதன் சிம் கார்டுகள் முடக்கப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வந்தது. தற்போது தொலைந்து போகும் செல்போன்களை கண்டறிய புதிய இணையதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ceir.sancharseathi.gov.in ல் புகார் அளித்தால், மத்திய சாதன அடையாள பதிவின் மூலமாக IMEI எண்ணை பயன்படுத்தி தொலைந்த செல்போனை 24 மணி நேரத்தில் முடக்கலாம். யார் பெயரில் எத்தனை செல்போன்கள், சிம்கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறித்து இந்த இணையதளம் வாயிலாக அறியலாம்.