திருச்சி பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: திருப்பதி செல்ல மேலும் ஒரு ரயில் இயக்கம்!

திருச்சி பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: திருப்பதி செல்ல மேலும் ஒரு ரயில் இயக்கம்!

தமிழ்நாட்டின் திருச்சி மற்றும் வட மாவட்ட மக்கள் திருப்பதி செல்வதற்கு வசதியாக மேலும் ஒரு  வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

திருச்சியில் இருந்து விருத்தாச்சலம் வழியாக  ஹைதராபாத்திற்கு  செல்லும் இந்த சிறப்பு ரயில் திருப்பதிக்கும்  செல்லும் என்பதால் அதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  07610 என்ற  எண் கொண்ட இந்த சிறப்பு ரயில் திருச்சியிலிருந்து புதன்கிழமை காலை 6.05 மணிக்கு புறப்பட்டு விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி வழியாக மதியம் 2.50 மணிக்கு  திருப்பதி சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு ஹைதராபாத் நகரத்திற்கு வியாழக்கிழமை அதிகாலை 4 .10 மணிக்கு சென்றடையும்.

அதேபோல 07609 என்ற சிறப்பு ரயில் ஹைதராபாத்திலிருந்து வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு திருப்பதி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாசலம் வழியாக திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை மாலை 7.15க்கு சென்றடைகிறது. 

கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் திருப்பதிக்கு ரயில் மூலம் நேரடியாக செல்ல  விருத்தாச்சலம் ரயில் நிலையத்தில் இந்த ரயிலை காலை 8 மணிக்கு பிடித்தால் மதியம் திருப்பதிக்கு சென்று விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in