புதிய நாடாளுமன்றம்: 40 சதவீதப் பணிகள் நிறைவு

புதிய நாடாளுமன்றம்: 40 சதவீதப் பணிகள் நிறைவு

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளில் 44 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும், குடியரசு தின அணிவகுப்பு நடத்தப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூவின் மறுகட்டமைப்புப் பணிகளில் 80 சதவீதம் முடிந்திருப்பதாகவும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக, மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் கவுஷல் கிஷோர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு இதுவரை 480 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும், சென்ட்ரல் விஸ்டா அவென்யூ மறுகட்டமைப்புப் பணிகளுக்கு 441 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவர் கட்டிடம், மத்தியத் தலைமைச் செயலகத்துக்கான மூன்று கட்டிடங்கள் என மொத்தமாக மத்திய விஸ்டா திட்டங்களுக்கு 2020-2021-ம் ஆண்டில் 419.55 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகக் கூறிய கவுஷல் கிஷோர், இப்பணிகளுக்காக 2021-2022-ல் 1,423 கோடி ரூபாயும், 2022-2023-ல் 2,285 கோடி ரூபாயும் செலவிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடப் பணிகளுக்கு 2020 டிசம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2022 அக்டோபர் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பணிகள் நிறைவுற்றால், அடுத்த குளிர்காலக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in