பாதுகாப்பு கூடிய புதிய நாடாளுமன்ற வளாகம்: மார்ச்சில் திறக்க ஏற்பாடு

பாதுகாப்பு கூடிய புதிய நாடாளுமன்ற வளாகம்: மார்ச்சில் திறக்க ஏற்பாடு

எதிர்வரும் மார்ச் மாதத்தில் புதிய நாடாளுமன்ற வளாகம் திறக்கப்பட இருப்பதாகவும், அதையொட்டி பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு அங்கே இடம்பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

இதனை முன்னிட்டு புதிய நாடாளுமன்ற வளாகத்தின் கட்டுமானப் பணிகள் துரிதம் பெற்றுள்ளன.

தற்போதைய நாடாளுமன்றத்துக்கு அருகிலேயே புதிய நாடாளுமன்ற வளாகத்தை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட ’சென்ட்ரல் விஸ்டா’ கட்டுமானப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 2020, டிசம்பரில் தொடங்கப்பட்டு, டாடா கட்டுமான நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகள் பிப்ரவரியில் நிறைவடைய உள்ளன. இதனையடுத்து மார்ச்சில் புதிய நாடாளுமன்ற வளாகம் திறப்பு விழா காண இருக்கிறது.

புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வும் இந்த நாடாளுமன்றத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஜனவரி 30 அல்லது 31-ல் குடியரசுத் தலைவரின் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு தொடங்கும். பிப்ரவரி முதல் நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதுடன் மொத்தம் 10 தினங்களில் இந்த முதல் அமர்வு முடிவுறும். தொடர்ந்து மார்ச் மத்தியில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு தொடங்கும்.

இந்த இரண்டாம் அமர்வு புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் வகையில், திட்டமிட்டவாறு நாடாளுமன்ற வளாகப் பணிகள் நிறைவுற இருக்கின்றன. இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான வேலைப்பாடுகளுடன், நிலநடுக்கம் மற்றும் குண்டு வீச்சினை எதிர்கொள்ளும் பாதுகாப்பு அம்சங்களும் அமைந்திருப்பது புதிய நாடாளுமன்ற வளாகத்தின் சிறப்பம்சங்களாகும். இவற்றுடன் எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதிகள், நூலகம், உணவகம், வாகன நிறுத்தம் உள்ளிட்டவையுடன் நவீன வடிவில் புதிய நாடாளுமன்ற வளாகம் திறப்பு விழா காண உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in