விடுமுறை குறித்து பள்ளி மாணவர்களுக்கு புதிய உத்தரவு

விடுமுறை குறித்து பள்ளி மாணவர்களுக்கு புதிய உத்தரவு

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் டிச.3-ம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால் பல நாட்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடுசெய்வதற்காக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.

இதன் காரணமாக டிச. 3-ம் தேதி (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அல்ல என்றும் அன்றைய தினம் பள்ளிகள் இயங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை அலுவலர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தொடர் மழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் டிச. 3-ம் தேதி (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படவேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் டிச.3-ம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அதை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in