உதயச்சந்திரனுக்கு இளைஞர் நலன் துறை ஒதுக்கீடு!

உதயச்சந்திரனுக்கு இளைஞர் நலன் துறை ஒதுக்கீடு!

முதல்வரின் தனிச் செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத், சண்முகம் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் தனி செயலாளராக உள்ள உதயசந்திரனுக்கு, சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. உமாநாத் ஐ.ஏ.எஸ்க்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில், ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சண்முகம் ஐ.ஏ.எஸ்க்கு , கால்நடை மற்றும் மீன்வளத்துறை, கைத்தறி, காதி, சமூக சீர்த்திருத்தம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதலமைச்சரின் சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளை திட்டமிடுதல் ஆகியவை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் 4ம் தனிச் செயலாளராக இருந்த அனு ஜார்ஜ்க்கு வழங்கப்பட்டிருந்த 12 துறைகள், தற்போது 3 தனி செயலாளர்களுக்கு பிரித்து வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, முதலமைச்சரின் தனி செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முகம் ஆகியோர் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in