ஆளுநருக்கு எதிராக தொடரும் கல்லூரி மாணவர்களின் போராட்டம்!

ஆளுநருக்கு எதிராக தொடரும் கல்லூரி மாணவர்களின் போராட்டம்!

சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

ஆளுநரின் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னையில் உள்ள ஒரு சில கல்லூரிகளில் மாணவர்கள் ஆளுநருக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஆளுநர் ரவிக்கு எதிராக இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தி இருந்த நிலையில் இன்றைக்கு சென்னை புதுக்கல்லூரி மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in