‘இல்லம் தோறும் வள்ளுவர்’: விஜய் சேதுபதி முதலடி!

‘இல்லம் தோறும் வள்ளுவர்’: விஜய் சேதுபதி முதலடி!

’இல்லம் தோறும் வள்ளுவர்’ என்ற தமிழர்களின் வீடு தோறும் திருவள்ளுவரை சேர்க்கும் பிரச்சாரத்தின் அங்கமாக, முதல் சிலையை நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக்கொண்டார்.

இந்தியாவின் சமகால இளம் புகைப்படக் கலைஞர்களில் முக்கியமானவர் அருண் டைட்டன். இவரது முன்னெடுப்பில் ’சிலை’ என்ற குடையின் கீழான இளம் சிற்பிகள், புதிய பாணியிலான சிலைகளை வடித்து வருகின்றனர். அரசியல் மற்றும் திரை விழாக்கள், தனிப்பட்ட பரிசு பகிர்வுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இவர்கள் வடிக்கும் சிலைகள் பரிமாறப்படுகின்றன.

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் முதல் விக்ரம் படத்தின் 100வது நாள் விழாவின் பரிசுகள் வரை பல்வேறு மேடைகளை ’சிலை’ அலங்கரித்து வருகிறது. தற்போது புதிய முயற்சியாக இல்லம் தோறும் வள்ளுவர் என்ற பிரச்சார இயக்கத்தை ’சிலை’ தொடங்கியுள்ளது.

உலகப்பொதுமறை வடித்து தந்த வள்ளுவரின் சிலையை வீட்டில் அலங்கரிக்கச் செய்வதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வூட்டவும், நமது கலாச்சாரத்தை ஒருங்கிணைக்கவும் இந்த ஏற்பாட்டினை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழ் புத்தாண்டுக்குள் சுமார் 1 லட்சம் வள்ளுவர் சிலைகளை தமிழர் இல்லங்களில் சேர்ப்பதை இலக்காகவும் கொண்டு, இதனை ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்காக ரூ499 முதல் ரூ4,999 வரை வள்ளுவர் சிலைகளை வடிவமைத்து, https://www.silaii.com/ என்ற தளம் வாயிலாக ஆன்லைனிலும் விற்பனை செய்து வருகிறார்கள்.

’இல்லம் தோறும் வள்ளுவர்’ இயக்கத்தின் முதல் வள்ளுவர் சிலையை நடிகர் விஜய் சேதுபதி பெற்றுள்ளார். வள்ளுவரின் வரிசையில் உலகப்பெரும் தலைவர்கள், தத்துவியலாளர்கள், புரட்சியாளர்களின் சிலைகளையும் ’சிலை’ வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in