வருசநாடு அருகே அருவி பாறையில் குளித்த புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்

வருசநாடு அருகே அருவி பாறையில் குளித்த புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்

வருசநாடு அருகே அருவி பாறையில் குளித்துக்கொண்டிருந்த புது மாப்பிள்ளை வழுக்கி விழுந்ததில் பலியானார்.

மதுரை காளவாசல் அருகே  சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள்.  இவரது மகன் அருண்பாண்டி (வயது26). ஒரு மாத்திற்கு முன் இவருக்கு திருமணமானது. இவர் தனது நண்பர்களுடன் மதுரையில் இருந்து இரு சக்கர  வாகனத்தில் தேனி மாவட்டம், வருசநாடு அருகே யானை கஜம் அருவியில் குளிக்கச் சென்றார். 

அருவியில் பாறை மீது ஏறி குளித்து கொண்டிருந்த போது,  அருண்பாண்டி  வழுக்கி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், கடமலைக்குண்டு போலீசார் அங்கு சென்றனர். அருண்பாண்டியின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in