கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கணவரை கொல்ல முயன்றார்: போலீஸ் விசாரணைக்கு பயந்து உயிரை மாய்க்க முயன்ற மனைவி

கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கணவரை கொல்ல முயன்றார்: போலீஸ் விசாரணைக்கு பயந்து உயிரை மாய்க்க முயன்ற மனைவி

குமரி மாவட்டத்தில் கணவருக்கு பாய்சன் கொடுத்த புதுமணப்பெண், போலீஸாரின் சந்தேகப்பார்வை தன் மேல் விழுந்ததை அடுத்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆழ்வார்கோயில் பகுதியைச் சேர்ந்த வடிவேல் முருகன்(32) கட்டுமானத் தொழிலாளியாக உள்ளார். இவருக்கும் சுஜா என்னும் பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த வடிவேல் முருகன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிலையில் இரணியல் காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்றும் கொடுத்தார்.

அதில், “என் மனைவி திருமணத்திற்கு முன்பே வேறு ஒரு வாலிபரைக் காதலித்தார். திருமணத்திற்கு பின்பும் அவரோடு தொடர்பில் உள்ளார். அவரோடு சேர்ந்து என்னைக் கொலை செய்ய வியூகம் வகுத்துள்ளார். எனக்கு மெல்லக் கொல்லும் விஷத்தைக் கொஞ்சம், கொஞ்சமாக கொடுத்துள்ளார். இதுதொடர்பாக என் மனைவி சுஜா, அவரது ஆண் நண்பருடன் பேசும் வாட்ஸ் அப் பதிவுகள் என்னிடம் சாட்சியாக உள்ளது. போலீஸார் இருவரையும் கைது செய்து, எனக்கு என்ன வகையான விஷம் கொடுக்கப்பட்டது என்பதை விசாரித்து உரிய சிகிச்சை கிடைக்க வழிசெய்ய வேண்டும்.

சிலநாள்களுக்கு முன்பு என் மனைவியின் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தேன். எனக்கு வயிறுவலி இருந்ததால் அதற்கு நான் சிகிச்சை எடுத்துவந்தேன். இந்நிலையில் எனக்கு வழக்கமாக கொடுக்கும் மருந்தில் ஏதோ கலந்து கொடுத்ததாக என் மனைவி என்னிடமே சொன்னார்” என கூறியுள்ளார். இதனிடையே வடிவேல் முருகனின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு உண்மையிலேயே விஷம் கொடுக்கப்பட்டதா என ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. போலீஸார் நடத்திய விசாரணையில் சுஜா தான் திருமணத்திற்கு முன்பே காதலித்துவந்த வாலிபரோடு சேர்ந்து இதை அரங்கேற்றியிருப்பது தெரியவந்தது. இதில் முதல்கட்டமாக சுஜா மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரது கள்ளக்காதலனைக் கைது செய்யவும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இறச்சகுளம் பகுதியில் தன் தாய் வீட்டில் வசித்துவந்த சுஜா, நேற்று இரவு விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார். இதில் அவர் வீட்டில் மயங்கி விழுந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in