`அதிக கட்டணம் வசூலிக்கிறார்களா?; உடனே புகார் அளியுங்கள்'- ஆம்னி பேருந்து சங்கம் திடீர் அதிரடி நடவடிக்கை

`அதிக கட்டணம் வசூலிக்கிறார்களா?; உடனே புகார் அளியுங்கள்'- ஆம்னி பேருந்து சங்கம் திடீர் அதிரடி நடவடிக்கை

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அந்த பயணம் சவால் நிறைந்ததாக இருக்கும். முன்னிரவு தீபாவளிக்கு செல்லலாம் எனக் கணக்குப் போட்டு கோயம்பேடு வரும் சிலர், பேருந்து கிடைக்காத காரணத்தால் காலையில் தீபாவளி கொண்டாடிய பிறகு செல்வது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. ரயில் டிக்கெட் கிடைக்காதவர்கள், பேருந்துகளில் முன்பதிவு செய்து செல்கின்றனர். அப்படிச் செல்பவர்கள் 30 நாட்களுக்கு முன்பே அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்ய வேண்டும். அங்கும் டிக்கெட் கிடைக்காதவர்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை பொதுமக்களை வெகுவாக பாதிப்படையச் செய்துள்ளது. மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு 3000 ரூபாய் என ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. ஆம்னி பேருந்து கட்டண கொள்ளைக்கு நடவடிக்கை எடுப்பதாக அரசு அறிவித்ததாலும், பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகத் தொடர் குற்றச்சாட்டு  எழுந்ததன் எதிரொலியாக ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  http://aoboa.co.in என்ற இணையதளத்தில் ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு எனப் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூலித்தால், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in