நேபாளத்தில் பயங்கர விமான விபத்து: பயணம் செய்த 72 பேரின் நிலை என்ன?

நேபாளத்தில் பயங்கர விமான விபத்து: பயணம் செய்த 72 பேரின் நிலை என்ன?

72 பேருடன் காத்மாண்டு நோக்கிச் சென்ற விமானம் இன்று காலை நேபாளத்தின் பொக்காராவில் விழுந்து நொறுங்கியதாக எட்டி ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மத்திய நேபாளத்தில் அமைந்துள்ள பொக்காராவின் பழைய மற்றும் புதிய விமான நிலையங்களுக்கு இடையில் விபத்துக்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தில் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். தரையிறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் விமானம் விழுந்து நொறுங்கியதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக விமானத்தில் பயணம் செய்த 72 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை.

மீட்புப் பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றபோது அருகில் இருந்த ஆலை ஒன்று தீப்பிடித்து எரிந்தது என்று நேபாள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மீட்புக்குழுக்கள் விமான விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளன. மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in