திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்: ஜூன் வரை நீட்டிப்பு

ரயில் சேவை -மாதிரிப் படம்
ரயில் சேவை -மாதிரிப் படம்

திருநெல்வேலி சந்திப்பு - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில், தென்காசி மற்றும் ராஜபாளையம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

1. ரயில் எண். 06030 திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 06 முதல் ஜூன் 29 வரை வியாழக்கிழமைகளில், திருநெல்வேலியில் 19.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 07.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

2. ரயில் எண். 06029 மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 07 முதல் ஜூன் 30 வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் 19.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 07.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

இந்த ரெயில் சேவையின் நிறுத்தங்கள்: சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன் கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி சந்திப்பு, போத்தனுார் சந்திப்பு, கோயம்புத்தூர்.

இந்த ரயிலில் , இரண்டு  ஏசி 3-அடுக்கு பெட்டிகள், ஒன்பது  தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், இரண்டு பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு கம் லக்கேஜ்/பிரேக் வேன் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்குமிட வசதி பெட்டி ஆகியவை இணைக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in