`இந்த மாணவர்கள் மருத்துவப்படிப்பை தொடர நீட் தான் தடையாக உள்ளது'- அமைச்சர் செஞ்சி மஸ்தான்

`இந்த மாணவர்கள் மருத்துவப்படிப்பை தொடர நீட் தான் தடையாக உள்ளது'- அமைச்சர் செஞ்சி மஸ்தான்

"உக்ரைனிலிருந்து மருத்துவப்படிப்பை பாதியிலேயே விட்டு வந்த மாணவர்களை மருத்துவப்படிப்பில் தமிழகத்தில் சேர்ப்பதற்கு நீட் ஒரு தடையாக உள்ளது" என்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த பிரப்வரி மாதம் போர் நடந்தது. இந்தப் போரினால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்திய மாணவர்கள் தான். குறிப்பாக தமிழக மாணவர்கள் தான். உக்ரைனில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் படித்து வந்தனர். ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால், உயிர் பயத்தில் இந்திய மாணவர்கள் அவசரமாக நாடு திரும்பினர். 8 மாதங்கள் ஆன நிலையில் இன்றுவரை போர் நடந்து வருகிறது. இதனால், இந்திய மாணவர்கள் தங்கள் மருத்துவப்படிப்பை தொடர முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசை மாணவர்கள் நம்பியிருந்தனர். இந்நிலையில், உக்ரைனில் மருத்துவம் படித்து பாதியில் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் படிக்க இடம் வழங்க விதிகளில் இடமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால், இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில் குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரனின் உடல் இன்று திருச்சி விமான நிலையம் வந்தது. அவரது உடலுக்கு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறைப்படி பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும் என்றும் வெளிநாடுகளில் வேலைக்கு சென்றவர்களில் கடந்த ஆண்டில் 152 பேரும், இந்த ஆண்டு 116 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், உக்ரைனிலிருந்து மருத்துவப்படிப்பை பாதியிலேயே விட்டு வந்த மாணவர்களை மருத்துவப்படிப்பில் தமிழகத்தில் சேர்ப்பதற்கு நீட் ஒரு தடையாக உள்ளது என்றும் அந்த மாணவர்களுக்கும் உரிய மருத்துவப்படிப்பு இங்கேயே வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார் என்றும் பொறியியல், வேளாண்மை படிப்பை பாதியிலேயே விட்டு உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களுக்கு தமிழக கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என முதல்வர் கூறி உள்ளார் என்றும் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in