இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு: 13 மொழிகளில் நடைபெறுகிறது!

இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு
இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வுஇந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு: 13 மொழிகளில் நடைபெறுகிறது!

இந்தியா முழுவதும் இன்று 499 மையங்களில் 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை 20 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

இந்தியாவில் மருத்துவ படிப்பு பயில நீட் தேர்வை மாணவ, மாணவிகள் எழுத வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்புகள் உள்ள போதிலும், இந்தத் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் 499 நகரங்களில் நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது. மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பம் செய்தனர். இவர்களுக்கு கடந்த 3ம் தேதி முதல் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. அதில் மாணவ, மாணவிகள் எந்த நகரத்தில் எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மொழிகளில் சுமார் 20 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் அவர்கள் இன்று தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதில் 14 ஆயிரம் பேர் அரசு பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் அங்கு இன்று நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in