இன்று முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு: 1.60 லட்சம் பேர் பங்கேற்பு

இன்று முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு
இன்று முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு இன்று முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு: 1.60 லட்சம் பேர் பங்கேற்பு

இந்தியா முழுவதும் 600-க்கும் மேற்பட்ட மையங்களில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் 1.60 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்கிறார்கள்.

அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்.டி.,எம்.எஸ். மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உட்பட நாடு முழுவதும் 42,500 இடங்கள் உள்ளன. தேசிய தகுதி, நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதி பெறுபவர்களைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. இத்தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் (என்டிஏ) நடத்துகிறது.

2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு https://nbe.edu.in மற்றும் https://www.natboard.edu.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த ஜன.7-ம்தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி, 27-ம் தேதி நள்ளிரவு 11.55 மணியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்படநாடு முழுவதும் 271 நகரங்களில் 600-க்கும் மேற்பட்ட மையங்களில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in