நீல் மோகனுக்கு ட்விட்டர் போட்ட தூண்டில்; ரூ.828 கோடி தந்து தக்கவைத்த கூகுள்!

ருசிகர கார்ப்பரேட் கலாட்டா
நீல் மோகன்
நீல் மோகன்

யூடியூப் தளத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியான நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை முன்வைத்து இந்திய பின்னணியிலான மூளைகளை தங்கள் நிறுவனத்துக்கு கவர சர்வதேச டெக் நிறுவனங்கள் மேற்கொண்ட சுவாரசிய பேரங்கள் தெரிய வந்திருக்கின்றன.

அல்ஃபபெட் தாய் நிறுவனத்தின் அங்கமாக இருப்பது யூடியூப் தளம். இதன தலைமை செயல் அதிகாரியாக இருந்த சூசன் வோஜ்சிகி விலகியதை அடுத்து, அந்த இடத்துக்கு இந்திய வம்சாவளியான நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இதே நிறுவனத்தில் தலைமை தயாரிப்பு அதிகாரியாக இவர் இருந்தார்.

இவர் பணியாற்றி வந்த டபிள்க்ளிக் என்ற டெக் நிறுவனத்தை கூகுள் வாங்கியதை அடுத்து, 2008 முதல் நீல் மோகனின் கூகுள் அத்தியாயம் தொடங்கியது. 2011ல் ட்விட்டர் நிறுவனம் நீல் மோகனுக்கு பெரும் தொகையை காட்டி இழுக்க முயன்றது. நீல் மோகனும் கூகுளில் இருந்து ட்விட்டர் நிறுவனத்துக்கு நகர முயன்றார். ஆனால் பணித்திறன் மிக்க அவரை இழக்க விரும்பாத கூகுள் நிறுவனம் நீல் மோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் அடிப்படையில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிறுவனத்தின் பங்குகள் மற்றும் ஊதிய உயர்வு தந்து நீல் மோகனை தன் வசமே வைத்துக்கொண்டது.

இதேபோன்று கூகுள் தலைமை செயல் அதிகாரியாக தற்போது பணியாற்றும் கூகுள் பிச்சை முன்னதாக அந்நிறுவனத்தின் கீழ் பொறுப்பில் இருந்தபோது, அவருக்கும் ட்விட்டர் நிறுவனம் தூண்டில் போட்டது. சுந்தர் பிச்சையிடமும் பேச்சுவார்த்தை நடத்திய அப்போதைய கூகுள் தலைமை, 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகளை வாரி வழங்கி அவரை ட்விட்டருக்கு தாவவிடாது தக்கவைத்துக்கொண்டது.

யூடியூப் தளத்தின் சிஇஓ பொறுப்பில் நீல் மோகன் நியமிக்கப்பட்ட முன்னிட்டு, இந்த டெக் உலக சுவாரசிய ரகசியங்கள் வெளிப்பட்டு வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in