சத்தீஸ்கரில் நக்சல்கள் அட்டகாசம்: எஸ்.ஐ உள்பட 3 போலீஸார் சுட்டுக்கொலை

நக்சல் தேடுதல் வேட்டை
நக்சல் தேடுதல் வேட்டைசத்தீஸ்கரில் நக்சல்கள் அட்டகாசம்: எஸ்.ஐ உள்பட 3 போலீஸார் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் உள்பட மூன்று காவலர்கள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், ஜகர்குண்டா மற்றும் கண்டட் கிராமங்களில் இன்று காலை 9 மணியளவில் நக்சல் தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது சுக்மா மாவட்டத்தில் ஒரு இடத்தில் பதுங்கியிருந்த நக்சல்கள் திடீரென போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து காவல் துறையினர் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த மோதலில் காவல் துறை உதவி ஆய்வாளர் ஆசி ராமுரம்நக் மற்றும் போலீஸார் குஞ்சாம் ஜோகா மற்றும் சைனிக் வான்ஜாம் பீமா ஆகியோர் கொல்லப்பட்டதாக ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபகாலத்தில் நக்சல் தாக்குதல் அதிகரித்துள்ளது. பிப்.5-ம் தேதி பாஜகவின் அவபள்ளி மண்டலின் தலைவர் நீல்காந்த் ககெம் நக்சல்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பிப்.10-ம் தேதி நாராயன்பூர் மாவட்டத்தில் பாஜகவின் துணைத் தலைவர் சாகர் சஹு நக்சல்களால் சுட்டுக் கொல்லப்பட்டார், இக்கொலைகள் குறித்து விசாரணை நடத்தக்கோரி டிஜிபி அசோக் ஜுன்ஜா என்ஐஏக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் உள்பட மூன்று பேர் இன்று கொல்லப்பட்டுள்ள சம்பவம் போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in