
இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 2010 ல் 1005 ஆக இருந்த நிலையில் 2022ல் அது 98 ஆக குறைந்துள்ளது என்று மக்களவையில் எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் இடதுசாரி தீவிரவாதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், "கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் நக்சல் வன்முறைகள் 77 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் இது தொடர்பான சம்பவங்களில் இறப்பு எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது. இடதுசாரி தொடர்பான வன்முறையின் புவியியல் பரவலும் கணிசமாகக் குறைந்துள்ளது. 45 மாவட்டங்களில் உள்ள 176 காவல் நிலையங்களில் மட்டுமே 2022ம் ஆண்டில் இது தொடர்பான வன்முறைகள் பதிவாகியுள்ளன. 2010ல், 96 மாவட்டங்களில் குறைந்தபட்சம் 465 காவல் நிலையங்கள் இது தொடர்பான வன்முறைகள் பதிவானது.
இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 2010ல் 1005 லிருந்து 2022 ல் 98 ஆகக் குறைந்துள்ளது. முக்கியமாக ஜார்க்கண்டில் பாதுகாப்பு நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 2009ல் 742 ஆக இருந்தது, 2022ல் அது132 ஆக 82 சதவீதம் குறைந்துள்ளது" என்று தெரிவித்தார்.