பழநியில் ஆர்ப்பாட்டத்தின் போது பரபரப்பு: நுபுர் சர்மா, ஜிண்டால் உருவபொம்மைகள் எரிப்பு


பழநியில் ஆர்ப்பாட்டத்தின் போது பரபரப்பு: நுபுர் சர்மா, ஜிண்டால் உருவபொம்மைகள் எரிப்பு

நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய கோரி பழநியில் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இருவரது உருவ பொம்மைகளைத் தீயிட்டு எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி பேருந்து நிலையம் முன்பு இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பழனி டவுன் முஸ்லிம் தர்மபரிபாலன சங்கம், பழநி தாலுகா ஜமாஅத், பழனி தாலுகா உலமா சபை மற்றும் இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய இயக்கங்களின் ஆர்ப்பாட்டம்
இஸ்லாமிய இயக்கங்களின் ஆர்ப்பாட்டம்

நபிகள் நாயகம் குறித்து இழிவுபடுத்தும் கருத்துக்களை தெரிவித்த பாஜகவைச் சார்ந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வேண்டும். நபிகள் நாயகம் குறித்து இழிவு படுத்தி கருத்துக்களைப் பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரது உருவ பொம்மைகளைத் தீயிட்டு எரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in