புழல் சிறையில் கைதிகள் பராமரிக்கும் இயற்கை நாற்றுப்பண்ணை

இயற்கை நாற்றுப்பண்ணையை ஆய்வு செய்த அமரேஷ் பூஜாரி
இயற்கை நாற்றுப்பண்ணையை ஆய்வு செய்த அமரேஷ் பூஜாரிபுழல் சிறையில் கைதிகள் பராமரிக்கும் இயற்கை நாற்றுப்பண்ணை

புழல் சிறைச்சாலையில் மருத்துவ மூலிகைகள், தாவரங்களின் நாற்றுப் பண்ணை திறக்கப்பட்டுள்ளது. பல மருத்துவ குணங்கள் கொண்ட இந்த நாற்றுப் பண்ணை சிறைவாசிகளால் பராமரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புழல் சிறைச்சாலையில் பல்வேறு திட்டங்களைச் சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கைதிகளின் துணிகளை துவைப்பதற்காக சலவை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவ குணங்கள் அடங்கிய தாவரங்கள் கைதிகளால் வளர்க்கப்பட்டு பராமரிக்கவும் திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் இயற்கை நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

பல மருத்துவ குணங்கள் கொண்ட இந்த நாற்றுப் பண்ணை சிறைவாசிகளால் பராமரிக்கப்படும். ரசாயன உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் இந்நாற்றுப் பண்ணையில் பயன்படுத்தப்படமாட்டாது. செடிகளின் விரைவான வளர்ச்சிக்காக நாற்றுப் பண்ணையில் பசுமை இல்லமும் வழங்கப்பட்டுள்ளது.

மூலிகைகள் சந்தையில் விற்கப்பட்டு அதில் கிடைக்கும் லாபம் சிறைவாசிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும். சிறைத்துறை இயக்குநர் அமரேஷ் பூஜாரி இந்நாற்றுப்பண்ணையை ஆய்வு செய்து இதனை பராமரிக்கும் சிறைவாசிகளுடன் கலந்துரையாடினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in