நாடு முழுவதும் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம்: ரிசர்வ் வங்கி முடிவு

நாடு முழுவதும் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம்: ரிசர்வ் வங்கி முடிவு

சோதனை முறையில் நாடு முழுவதும் 9 வங்கிகள் மூலம் நாளை (நவ.,1) டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பணம் பேப்பர் வடிவிலும், நாணயம் உலோக வடிவிலும் உளளது. இதே போல டிஜிட்டல் கோட்கள் மூலம் உருவாக்கப்படுவது டிஜிட்டல் நாணயங்கள் அல்லது டிஜிட்டல் கரன்சி என்று கூறப்படுகிறது. இவற்றை அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன. காகித பணத்திற்குச் சமமாக இந்த டிஜிட்டல் பணமும் மதிக்கப்படுகிறது. இந்த நாணயத்தை சில நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன.

இந்தியாவில் ரூபாய்க்கு இணையான டிஜிட்டல் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிடும் என மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதன்படி, நாடு முழுவதும் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயங்களை நாளை அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கோடக் மகேந்திரா, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி, எச்எஸ்பிசி வங்கி ஆகிய 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த நாணயம் அடுத்த ஒரு மாதத்திற்குள் முழு பயன்பாட்டிற்கு வரும் என்றும், அரசு பத்திரங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனை பயன்பாட்டிற்கு இந்த டிஜிட்டல் நாணயம் பயன்படுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in