‘ஆண்டின் சிறந்த புகைப்படம்’: இந்திய வம்சாவளிக்கு பெருமை சேர்த்த வெண்டலைக் கழுகுகள்!

கழுகுகளின் நடனம் - பரிசு பெற்ற புகைப்படம்
கழுகுகளின் நடனம் - பரிசு பெற்ற புகைப்படம்

நேஷனல் ஜியாகிராபிக் சார்பிலான ஆண்டின் சிறந்த புகைப்படம் போட்டியில் கார்த்திக் சுப்ரமணியம் என்பவர் எடுத்த ’வெண்டலைக் கழுகுகளின் நடனம்’ புகைப்படம் விருது பெற்றிருக்கிறது.

அமெரிக்க பின்னணியிலான ’நேஷனல் ஜியாகிராபிக்’ என்ற சூழல் சார்ந்த, காட்சி மற்றும் அச்சு ஊடகம் நடத்திய ஆண்டின் சிறந்த புகைப்படத்துக்கான போட்டியில் கார்த்திக் சுப்ரமணியத்தின் இந்த புகைப்படம் வாகை சூடியுள்ளது.

இந்திய பின்புலத்தை கொண்ட கார்த்திக், அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சான்பிரான்சிஸ்கோவில் வசித்து வரும் இவர் அலாஸ்காவின் வெண்டலைக் கழுகளுகள் சரணாலயத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த எடுத்த புகைப்படங்கள் தற்போது விருது அங்கீகாரம் பெற்றுள்ளன. இவர் எடுத்தது உட்பட பரிசுக்குரிய பல்வேறு புகைப்படங்கள் நேஷனல் ஜியோகிராபிக் இதழின் மே பதிப்பில் வெளியாக உள்ளன.

வெண்டலைக் கழுகு(Bald eagle) என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு கழுகு இனங்களில் முக்கியமானது. இதன் தலை வெள்ளை நிறத்துடனும், வளைந்த அலகு மஞ்சள் நிறத்துடனும், உடல் கரும் பழுப்பு நிறத்திலும் இருக்கும். அமெரிக்காவின் தேசியப் பறவையாகவும் இந்த கழுகு சிறப்பிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in