வேட்புமனுவை தாக்கல் செய்தார் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு!

வேட்புமனுவை தாக்கல் செய்தார் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு!

இந்தியாவின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளரிடம் தனது வேட்புமனுவை திரௌபதி முர்மு அளித்தார். இந்த வேட்புமனு தாக்கலின்போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் உடன் இருந்தனர்.

அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் தம்பிதுரை ஆகியோரும் இந்த வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும், பாஜக ஆளும் மாநில முதல்வர்களும், பிறக் கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in