பேருந்து நிலையத்தில் பாலியல் சீண்டல்; தூக்கத்தில் அலறிய நாடோடி பெண்: அடி தாங்காமல் தெறித்து ஓடிய வாலிபர்

 குளச்சல் பேருந்து நிலையம்
குளச்சல் பேருந்து நிலையம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் குடும்பத்தினரோடு குளச்சல் பேருந்து நிலையத்தில் படுத்திருந்த நாடோடி பெண்ணுக்கு, பாலியல் சீண்டல் கொடுத்த வாலிபருக்கு தர்ம அடி விழும் காட்சிகள் வைரல் ஆகிவருகிறது.

நிரந்தர வசிப்பிடம் இன்றி ஊசி, பாசி விற்க அலையும் நாடோடிகள் ஆங்காங்கே பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்களில் தங்கிக்கொள்வது வழக்கம். அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் பேருந்து நிலையத்தில் நாடோடிகள் சிலர் குடும்பமாக தங்கியிருந்து ஊசி, பாசி விற்றுக் கொண்டிருந்தனர். இவர்கள் தினமும் இரவு பேருந்து நிலையத்திலேயே தூங்குவார்கள்.

நேற்று இரவும் வழக்கம்போல் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று காலையில் முழு போதையில் வந்த ஆசாமி ஒருவர் குடும்பமாக தூங்கிக் கொண்டிருந்த நாடோடி பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இந்த போதை ஆசாமி ஏற்கெனவே ஒருமுறையும் இப்படிச் செய்துவிட்டு, சப்தம் போட்டதும் தப்பியோடியவர் ஆவார். இன்று காலையில் பாதிக்கப்பட்ட பெண் சப்தம் போடவே, உடனே குடும்பத்தினர் அனைவரும் முழித்துக்கொண்டனர். உடனே, அந்த போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்தனர். ஆனால் போதை ஆசாமியோ, என்னிடம் மோதினால் கடலில் கல்லைக் கட்டி, குடும்பத்தையே மூழ்கடித்துவிடுவேன் என மிரட்டினார். ஒருகட்டத்தில் குடும்பத்தினரின் தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் கோடிமுனை பேருந்தில் ஏறிச் சென்றார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளைப் பார்த்த போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் அந்த போதை ஆசாமிக்கு, கோடிமுனை என்பதை உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து குளச்சல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in