விஜய்யை போதைப்பொருளாக சித்தரித்த தமிழக போலீஸ்; கொந்தளித்த ரசிகர்கள்: உடனே நீக்கப்பட்டது வீடியோ

விஜய்யை போதைப்பொருளாக சித்தரித்த தமிழக போலீஸ்; கொந்தளித்த ரசிகர்கள்: உடனே நீக்கப்பட்டது வீடியோ

நடிகர் விஜய்யை போதைப் பொருளாக சித்தரித்து தமிழக போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

தமிழ்நாடு போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ தான் தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. அந்த வீடியோவில் நடிகர் விஜய் போதை பொருளாகவும், தேர்தல் அதிகாரி நல்ல வாழ்க்கையாகவும், வாக்காளர் போதைப் பொருள் பயன்பாட்டாளராகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.

நடிகர் விஜய்யை கவனிக்காமல் தேர்தல் அதிகாரிக்கு கை கொடுத்து செல்லும் வாக்காளரை போல் போதை பொருளை கவனிக்காமல் கடந்து சென்றால் நல்ல வாழ்க்கையை கையகப்படுத்தலாம் என வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பார்த்து விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர். அவர்கள் தமிழ்நாடு போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு எஸ்பி ரோகித் நாதனை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையானது தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த விழிப்புணர்வு வீடியோவை தமிழ்நாடு நுண்ணறிவு காவல்துறை அகற்றியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in