சாலையில் செல்பவர்கள் போட்டோ எடுக்கிறார்கள்: செஸ் போர்டாக மாறிய நேப்பியார் பாலம்

சாலையில் செல்பவர்கள் போட்டோ எடுக்கிறார்கள்: செஸ் போர்டாக மாறிய நேப்பியார் பாலம்

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னை நேப்பியார் பாலம் செஸ் போர்டு வடிவத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளது பொதுமக்களைக் கவர்ந்துள்ளது.

மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில், அந்த போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள பாரம்பரிய மிக்க நேப்பியார் பாலம் செஸ் போர்டு போன்று அச்சு, அசலாக வண்ணம் தீட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியே செல்பவர்கள் பாலத்தில் நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

பிரதமருக்கு அழைப்பிதழ்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு 19-ம் தேதி அழைப்பிதழ் வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மோடியைச் சந்தித்து அழைப்பிதழை வழங்குகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in