அதிகாலையில் வெடித்து சிதறிய வெடி; கணவன், மனைவி, மாமியார் உடல் சிதறி பலி: நாமக்கல்லில் பயங்கரம்

அதிகாலையில் வெடித்து சிதறிய வெடி; கணவன், மனைவி, மாமியார் உடல் சிதறி பலி: நாமக்கல்லில் பயங்கரம்

வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள மேட்டுத்தெருவில் வசித்து வந்தவர் தில்லைக்குமார். இவர் பட்டாசு விற்பனை மற்றும் தயாரிக்கும் தொழிலை செய்து வந்தார். புத்தாண்டையொட்டி தனது வீட்டில் ஏராளமான பட்டாசுகளை வைத்திருக்கிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பட்டாசில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசு வெடித்து சிதறியது. மேலும், வீட்டில் இருந்த சிலிண்டர்களும் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தால் தில்லைக்குமார், அவரது மனைவி பிரியங்கா, தாயார் செல்வி உள்பட நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் தில்லைக்குமாரின் வீடு உள்பட அருகில் இருந்த 5 வீடுகளும் தரைமட்டமானது. மேலும் 20க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை சேதம் அடைந்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து வெடி விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி தயாரிக்க அனுமதி பெற்றிருந்த தில்லைக்குமார், வீட்டில் வெடிவைக்க அனுமதி பெற்றவில்லை என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வெடி விபத்து குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in