‘நலம் 365’ யூட்யூப் சானல் தொடக்கம்

‘நலம் 365’ யூட்யூப் சானல் தொடக்கம்

தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான சிறப்பு உதயமாக ‘நலம் 365’ என்ற யூட்யூப் சானல் இன்று தொடங்கப்படுகிறது.

பொது சுகாதாரத் துறைக்கு என தனியாக ஒரு யூட்யூப் சானல் செயல்பட்டு வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறையின் நோக்கங்களை மக்களிடம் சேர்ப்பிக்கும் நோக்கோடு தனியாக ஒரு சானல் உதயமாகிறது. இந்த சானல் மூலமாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் தகவல்கள் முழுமைக்கும் மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாகும்.

மாநில சுகாதார நலத் திட்டங்கள், மருத்துவக் கல்விக்கான ஏற்பாடுகள், மருத்துவ சேவைகள், தடுப்பூசி திட்டங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுக்கான அம்சங்கள் இந்த சானலின் உள்ளடக்கமாக அமைந்திருக்கும். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(ஜன.2), 'நலம் 365' யூட்யூப் சானலை தொடங்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in