கடன் தொல்லையால் விரக்தி: குடும்பத்தினருடன் காருக்குள் தீவைத்துக்கொண்ட தொழிலதிபர்!

கடன் தொல்லையால் விரக்தி: குடும்பத்தினருடன் காருக்குள் தீவைத்துக்கொண்ட தொழிலதிபர்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், நிதி நெருக்கடி காரணமாக நேற்று தனது காரில் குடும்பத்தினருடன் தீ வைத்துக்கொண்டார்.

நாக்பூரை சேர்ந்த 58 வயதான ராம்ராஜ் பட், தனது குடும்பத்தினரை நேற்று ஒரு ஹோட்டலுக்கு மதிய உணவிற்காக வெளியே அழைத்துச் சென்றார். அதன்பின்னர் வெகுதொலைவுக்கு சென்று காரை சாலையில் திடீரென நிறுத்தினார். பிறகு அவர் தன் மீதும், மனைவி மற்றும் மகன் மீதும் பெட்ரோலை ஊற்றி, அவர்களின் எதிர்ப்பையும் மீறி அனைவருக்கும் தீவைத்தார்.

இதில் ராம்ராஜ் பட் பலத்த தீக்காயங்களுடன் உயிரிழந்தார். அவரது மனைவி சங்கீதா பட் மற்றும் மகன் நந்தன் ஆகியோர் எப்படியோ கதவுகளைத் திறந்து காரில் இருந்து குதித்தனர். ஆனால் அவர்களும் பலத்த தீக்காயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எரிந்த காரில் ஒரு பிளாஸ்டிக் பைக்குள் இருந்து தற்கொலைக் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது, அதில் தொழிலதிபர் தனது நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். கார் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருக்கும் பயங்கரமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in