2 கோடியே 36 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மோசடி: நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது

சிவசக்தி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள்
சிவசக்தி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் 2 கோடியே 36 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மோசடி: நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது

நாகப்பட்டினத்தில் நிதி நிறுவனம் நடத்தி ஏராளமானவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்த புகாரில் நிதி நிறுவன அதிபர் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

நாகப்பட்டினம் நகரம் நீலா மேல வீதியில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் சிவசக்தி குழுமம் சார்பாக சிவசக்தி சகாய நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் இயங்கி வரும் இந்த நிதி நிறுவனம் கடந்த கொரோனா காலத்திற்கு பிறகு முதலீடு செய்தவர்களுக்கு பணத்தைத் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இதில் முதலீடு செய்தவர்கள் நாகப்பட்டினம் நகர  காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர்.

இப்புகார்களை விசாரித்த காவல்துறையினர் மொத்தம் 2 கோடியே 36 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் முதலீட்டாளர்களுக்கு திரும்பத் தரப்படாமல் இருப்பதை உறுதி செய்து அதன் பேரில் வழக்குப் பதிவு செய்தனர். அதனையடுத்து  நிதி நிறுவன அதிபர் ரவி, அவரது மகன் ஜெய் சிவா மற்றும் செந்தில் குமார், பாலாஜி ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். 

நாகப்பட்டினத்தில் நிதி நிறுவனம் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களைச் செய்து வரும்  முக்கிய குழுமமான சிவசக்தி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது நாகப்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in