கேரள குக்கிராமத்தின் பூமிக்கடியில் கேட்கும் மர்மமான சத்தம்: பீதியில் உறைந்துள்ள பொதுமக்கள்!

மர்மமான நிலத்தடி சத்தம்
மர்மமான நிலத்தடி சத்தம்

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய குக்கிராமத்தில் மர்மமான நிலத்தடி ஒலிகள் கேட்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கேரள சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் நிபுணர் குழு விரைவில் அப்பகுதியை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய குக்கிராமமான சென்னப்பட்டியில் வசிக்கும் மக்களிடையே மர்மமான நிலத்தடி ஒலிகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலையில் இரண்டு முறை காதைக் கிழிக்கும் மர்மமான சத்தம் கேட்டதாக சென்னப்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த வார தொடக்கத்திலும் இதே போன்ற ஒலிகள் அப்பகுதியிலும், அருகாமை இடங்களிலும் பதிவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் சுற்றுச்சூழலில் எந்த மாற்றமும் இல்லை என்றும், நிலத்தடி ஒலிகள் கேட்பதற்கான சரியான காரணத்தை அறிவியல் ஆய்வு மூலம் மட்டுமே கண்டறிய முடியும் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். கேரள சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் நிபுணர் குழு விரைவில் அப்பகுதியை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புவி அறிவியல் மையம் (CES) மேற்கொள்ளும் விரிவான அறிவியல் ஆய்வு மட்டுமே மீண்டும் மீண்டும் நில அதிர்வு ஒலிகள் ஏற்படும் உண்மையான காரணத்தைக் கண்டறிய முடியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in