தாலி கட்டும் நேரத்தில் மாயமான மாப்பிள்ளை: காதலியோடு எஸ்கேப்பானதால் நின்று போன திருமணம்

தாலி கட்டும் நேரத்தில் மாயமான மாப்பிள்ளை: காதலியோடு எஸ்கேப்பானதால்  நின்று போன திருமணம்

தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை தனது காதலியுடன் எஸ்கேப்பான சம்பவம் திருப்போரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் குமிழி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கும் மெய்யூரைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

மணமகனுக்கு 40 சவரன் தங்க நகை, ஏசி, பீரோ, கட்டில் மற்றும் பொருட்கள் வரதட்சணையாக வழங்க பேசப்பட்டிருந்தது. சதீஷ்குமாருக்கு நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் சதீஷ்குமார் காணாமல் போனார். அவரை இருவீட்டாரும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், அவர் நீண்ட நேரமாகியும் மண மேடைக்கு வரவில்லை.

மணமகன் அறையிலும் மணமகன் இல்லாததால், பெண் வீட்டார் சதீஷ்குமார் வீட்டாரிடம் இதுகுறித்து கேட்டனர். அப்போது சதீஷ்குமார் தனது காதலியுடன் எஸ்கேப்பானது தெரிய வந்தது. சதீஷ்குமார் வேறு ஒரு பெண்ணைக் காதலித்ததை மறைத்து அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தது பெண் வீட்டாருக்கு அப்போது தான் தெரிய வந்தது.

இதனால் பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. நீங்கள் கேட்டபடி வரதட்சணையாக கொடுத்த நிலையில், எங்களை ஏமாற்றி விட்டீர்களே என மணமகள் வீட்டார் சண்டையிட்டனர். இதனால், திருமண மண்டபத்தில் கலவரச்சூழல் ஏற்பட்டது.

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், இரு வீட்டாரையும் சமாதானம் செய்தனர். தங்களை மாப்பிள்ளை வீட்டார் ஏமாற்றி விட்டதாக பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மாப்பிள்ளை எஸ்கேப்பானதால் திருமணம் தடைபட்டதால் பெண் வீட்டார் சோகத்துடன் திரும்பிச் சென்றனர். திருமண நேரத்தில் மாப்பிள்ளை எஸ்கேப்பான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in