படகில் இருந்து கடலில் விழுந்த மீனவர்: ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை தீவிரம்

கடலுக்குள் தேடுதல் வேட்டையில் மீனவர்கள்
கடலுக்குள் தேடுதல் வேட்டையில் மீனவர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலின்போது கடலில் மாயமான மீனவரை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் எமில் லாரன்ஸ்(36). மீன்பிடித் தொழிலாளியான இவர் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடித்து வருகின்றார். கடந்த 4-ம் தேதி எமில் லாரன்ஸ் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த சக மீனவர்களோடு, கேரள மாநிலம் கொச்சி முனப்பம் துறைமுகத்தில் மீன்பிடிக்கச் சென்றார்.

இந்த மீனவர்கள் அனைவரும் கொச்சி துறைமுகத்திற்கு தாங்கள் பிடித்த மீன்களுடன் திரும்பினர். அவற்றை அங்கு ஏலம்விட்டு, விட்டு இன்று தருவைக்குளம் நோக்கி ஊர் திரும்பி கொண்டிருந்தனர். தருவையின் இருந்து 250 நாட்டிக்கல் தொலைவில் விசைப்படகு வந்து கொண்டிருந்தபோது, எமில் லாரன்ஸ் தவறி கடலில் விழுந்தார். உடனே படகில் இருந்த மற்ற மீனவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் எமில் லாரன்ஸைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கொச்சிக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. கொச்சின் இருந்து கடற்படை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலமும் தேடுதல் வேட்டை நடக்கிறது. இதேபோல், கடலோர காவல்படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in