‘குடிபோதையில் காரை மாற்றி எடுத்துவிட்டேன்'- வாடிக்கையாளரை பதறவைத்த ஊழியரின் வாக்குமூலம்

 கைது
கைது ‘குடிபோதையில் காரை மாற்றி எடுத்துவிட்டேன்'- வாடிக்கையாளரை பதறவைத்த ஊழியரின் வாக்குமூலம்

நாகர்கோவிலில் ஜவுளிக்கடையில் நிறுத்தியிருந்த கார் மாயமானது. இதில் மாயமான காருடன் அதே ஜவுளிக்கடையில் பணிசெய்த முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் பென்சாம்(69). இவர் நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றிற்குச் சென்றார். தன் காரை ஜவுளிக்கடையின் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவைத்து, அதற்கான டோக்கனும் வாங்கிவிட்டு கடைக்குச் சென்றார். இந்த நிலையில் அவர் கடைக்குள் சென்று பொருள்களை வாங்கிவிட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பக் காரை எடுக்கச் சென்றார். அப்போது அவரது கார் மாயம் ஆகியிருந்தது. இதனால் தன் கையில் இருந்த டோக்கனை வைத்துக்கொண்டு கடைக்காரர்களிடம் முறையிட்டார். அவர்கள் இதுகுறித்து நேசமணிநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

போலீஸார் நேரில்வந்து பார்க்கிங் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வுசெய்தனர். அதில் பென்சாம் காரை நிறுத்திச் சென்ற சிறிதுநிமிடத்திலேயே இருவர் வந்துகாரை திருடிச் செல்வது தெரியவந்தது. போலீஸார் இதுகுறித்து விசாரித்ததில் இதே ஜவுளிக்கடையில் இதற்கு முன்பு வேலை செய்த இறச்சகுளத்தைச் சேர்ந்த ராஜா, அவரது நண்பர் ராஜன் ஆகியோர் திருடிச் செல்வது தெரியவந்தது. போலீஸார் பென்சாமின் கார் எண்ணை அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து உஷார்படுத்தினர்.

அப்போது வடசேரி பகுதியில் இதே கார் வந்து கொண்டிருந்தது. அந்தக்காரைத் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்த போலீஸார், காரை ஒட்டிவந்த ராஜா, அவருடன் இருந்த ராஜன் ஆகியோரைக் கைது செய்தனர். ராஜா போலீஸாருக்குக் கொடுத்த வாக்குமூலத்தில், ‘தான் குடிபோதையில் இருந்ததாகவும், தான் விட்ட காருக்கு தவறுதலாக இந்தக் காரை எடுத்துவிட்டு வந்துவிட்டதாகக் கூறினார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in