பட்டிக்குள் புகுந்த மர்மவிலங்கு: ரத்தவெள்ளத்தில் செத்துக் கிடந்த 18 ஆடுகள்

பட்டிக்குள் புகுந்த மர்மவிலங்கு:  ரத்தவெள்ளத்தில் செத்துக் கிடந்த 18 ஆடுகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பட்டிக்குள் புகுந்து மர்மவிலங்கு தாக்கியதில் 18 ஆடுகள் பலியாகின.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சிவசக்தி நகர் அருகே வசிப்பவர் சுந்தர்ராஜ். இவர் ஆடுகள் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி சென்று விட்டு நேற்று இரவு ஆடுகளைப் பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.

இன்று அதிகாலை நேரத்தில் மர்மவிலங்கு பட்டிக்குள் புகுந்து இரண்டு குட்டி ஆடுகள், ஐந்து சினையாடுகள் உள்ளிட்ட 18 ஆடுகளைக் கடித்துக் குதறியது. இதனால் ஆடுகளின் கதறல் சத்தம் கேட்டு சுந்தர்ராஜ் வேகமாக பட்டிக்கு ஓடிவந்து பார்த்தார். அப்போது ஆடுகள் அனைத்தும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன. சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஆடுகள் அனைத்தும் மர்மவிலங்கால் வேட்டையாடப்பட்டு கிடப்பதைக் கண்டு சுந்தர்ராஜ் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வனத்துறையினர், கால்நடை மருத்துவர் சம்பவ இடத்தில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்," இப்பகுதியில் உள்ள தெருநாய்கள் கூட்டமாக வந்து ஆடுகளை வேட்டையாடிருக்கலாம். அல்லது வனவிலங்கு ஆடுகளை வேட்டையாடியாதா எனத்தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in