மைலாப்பூரில் தபால் நிலையத்தின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை: ஊழியர்கள் அதிர்ச்சி

மைலாப்பூர் தபால் நிலையம்
மைலாப்பூர் தபால் நிலையம்மைலாப்பூரில் தபால் நிலையத்தின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை!

மைலாப்பூரில் தபால் நிலையத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மைலாப்பூர் விவேகானந்தா கல்லூரி போஸ்ட் ஆபீஸ் சந்தைவெளி 4-வது தெருவில் தபால் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை தபால் நிலைய ஊழியர்கள் வேலை முடிந்து அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றனர். இந்தநிலையில் இன்று காலை துணை போஸ்ட் மாஸ்டர் சுமன் தபால் நிலைய அலுவலகத்தை திறப்பதற்காக வந்து பார்த்த போது அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு பணம் பெட்டியில் இருந்த 1400 கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே சுமன் இது குறித்து மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். தபால் நிலையத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in