'என் அம்மா டிசம்பர் 5-ல் இறந்துவிடுவார்,எனக்கு லீவு வேண்டும்': தலைமை ஆசிரியரை அதிர வைத்த ஆசிரியரின் கடிதம்

'என் அம்மா டிசம்பர்  5-ல் இறந்துவிடுவார்,எனக்கு லீவு வேண்டும்': தலைமை ஆசிரியரை அதிர வைத்த ஆசிரியரின் கடிதம்

தனது தாய் டிச.5-ம் தேதி இறந்து விடுவார் என்றும், அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய டிச.6, 7 ஆகிய தேதிகளில் விடுமுறை வேண்டும் என்று தலைமை ஆசிரியருக்கு அரசு பள்ளி ஆசிரியர் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிஹார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் சாதாரண விடுப்புக்கான விண்ணப்பங்களை மூன்று நாட்களுக்கு முன்பே தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்டக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் விடுப்பு கேட்பதற்கான காரணங்கள் வித்தியாசமாக உள்ளதாக கல்வி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிஹார் மாநிலம் பங்கா மாவட்டம் கச்சாரி பிப்ரா கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் அஜய்குமார். அவர் தலைமை ஆசிரியருக்கு விடுப்பு கேட்டு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அஜய்குமார் எழுதிய கடிதத்தில்," சார், என் அம்மா டிசம்பர் 5 திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு இறந்துவிடுவார். அதனால் அவரின் இறுதிச் சடங்குகளுக்காக டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 7 வரை என் பள்ளிக்கு வராமல் இருப்பேன். அதனால்தான் ஐயா, தயவு செய்து எனது விடுப்புக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று எழுதியுள்ளார்.

மற்றொரு ஆசிரியர் நீரஜ்குமார் என்பவர் தலைமை ஆசிரியருக்கு விடுப்பு கேட்டு எழுதிய கடிதத்தில், “டிசம்பர் 7-ம் தேதி திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளேன். திருமண விழாவில் நான் சாப்பாட்டை மிகவும் ரசித்து உண்பேன் என்று உங்களுக்குத் தெரியும், பிறகு வயிற்றுப்போக்கு வரத்தானே செய்யும்? அதனால்தான் விண்ணப்பத்தை மூன்று நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்கிறேன்” என்று விடுப்பு கடிதம் எழுதியுள்ளார் இது போன்று விடுப்பு கேட்டு சுவாசியமாக எழுதப்பட்ட கடிதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in